| 1 | அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. |
| 2 | அகல உழுகிறதை விட ஆழ உழு. |
| 3 | அகல் வட்டம் பகல் மழை. |
| 4 | அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. |
| 5 | அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். |
| 6 | அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது |
| 7 | அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? |
| 8 | அடக்கமே பெண்ணுக்கு அழகு. |
| 9 | அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். |
| 10 | அடாது செய்தவன் படாது படுவான் |
| 11 | அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும் |
| 12 | அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம் |
| 13 | அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும். |
| 14 | அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. |
| 15 | அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. |
| 16 | அந்தி மழை அழுதாலும் விடாது. |
| 17 | அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா? |
| 18 | அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான். |
| 19 | அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும். |
| 20 | அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா? |
| 21 | அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம். |
| 22 | அப்பன் அருமை மாண்டால் தெரியும். |
| 23 | அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. |
| 24 | அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம் |
No comments:
Post a Comment